இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவாக்கும் நோக்கத்தின் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் இன்று (செப்டம்பர் 16) காலை 0900 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைய மரியாதை செலுத்தி வரவேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக குறித்த கப்பலை கையளிக்கப்பட்டது. 10 கடற்படை அதிகாரிகள் மற்றும் 98 கடற்படை சிப்பாய்கள் கொன்டுள்ள இக் கப்பலில் கட்டளை அதிகாரியாக கேப்டன் நெவில் உபேசிரி அவர்கள் கடமையாற்றிகிரார். குறித்த கப்பல் CG60 எனப் பெயரலிக்கப்பட்டு இலங்கை கடலோரக் காவல்படைக்கு சேகரிக்கப்பட உள்ளது.

இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல இலங்கை கடலோரக் காவல்படையின் துனை பணிப்பாளர் நாயகம் நன்தன ஜயரத்ன ஆகியவர்கள் மற்றும் கடற்படை தலைமையகம் உட்பட மேற்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் கழந்துகொன்டனர்.