250வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிருவப்படுகின்றன. அதின் ஒரு சிறப்பு சந்தர்ப்பமாக 250வது நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களின் அழைப்பின்பேரில் ஹரவுபதான, ரிடிகஹவெவ ஸ்ரீ சத்தர்ம ஜோதிகாராமையில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இன்று (செப்டம்பர், 10) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், விவசாய அமைச்சர் கௌரவ துமிந்த திஸாநாயக்க, கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் கௌரவ பி. ஹாரிசன், அநுராதபுர மாவட்டத்தில் சிறுநீரக நோய் தடுப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி திஸ்ஸ கரலியத்த, பாதுகாப்பு படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா, முப்படைகளின் மூத்த அதிகாரிகள் உட்பட அப்பகுதி மக்கள் கழந்துக் கொன்டனர்.

குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 350 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெறுகின்றனர். மேலும் ஜனாதிபதியவர்களால் அப் பகுதியில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள 600 பேருக்கு சிறிய அளவிலான 600 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டது. மேலும் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்ற குறித்த முயற்சியை பாராட்டுவதற்காக ஜனாதிபதியவர்களால் கேப்டன் (பொறியாளர்) பிரியங்கர திசாநாயக்க அவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுக்கு இனையாக ரிதீமாலியத்த கெமுனுபுர கிராமம், வெலம்பெல கிராமம், கெசெல்பொத, செனவிகம, வலிசிங்க ஹரிச்சந்திர கல்லூரி கெசெல்பொத வடக்கு அனுராதபுரம், ஒயாமடுவ விஹாரய, கலென்பிந்துனுவெவ ஸ்ரீ கங்காராம விஹாரய, டி.எஸ். சேனநாயக்க ஆரம்பக்கல்லூரி அனுராதபுரம் மற்றும் வவுனியா இராணுவ சிறப்புப் படைகளின் தலைமையகம் ஆகிய இடங்களில் நிருவப்பட்ட 10 சுத்திகரிப்பு இயந்திரங்கள் அதிமேதகு ஜனாதிபயவர்களால் இணையத்தளம் மூலம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் இலங்கை இராணுவம் மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது வரை பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 121,544 குடும்பங்களுக்கும், 87,190 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மற்றும் 975 இராணுவத்தினருக்கும் கடற்படையினறால் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்

மேலும், சிறு நீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.