இலங்கை கடற்படையின் 229 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 229 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 390 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று செப்டம்பர் 09) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு பொருட்கள் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர அட்மிரல் நிஹால் பிரநான்து அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

கெளரவ மகா மகாசங்கத்தினர் உட்பட மற்ற மத குருமார்கள், கடற்படை தலைமையகத்தின் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. அப்போது 229 வது ஆட்சேர்ப்பில் ஆர்.ஆர்.யூ.சி ராஜபக்‌ஷ சிறந்த பயிட்சியாளருக்கான விருதை பெற்றார் பீ.எம் டில்ஷான் சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெற்றார். ஜீ.ஆர்.பி.எம் பன்டார சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் எச்.பி.டி.எல் பிரியதர்ஷன மற்றும் டி.ஜி.எஸ்.எம் ரத்னாயக சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதை வென்றனர்.