இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் இன்று தனது 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. அதற்காக பல கடற்படை பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதின் பிரகாரமாக ரங்கல நிறுவனத்தின் தற்போதைய கட்டளை அதிகாரியான கேப்டன் சேனக செனவிரத்ன அவர்களால் முதலில் பிரிவு சரிபார்க்கப்பின் கடற்படை வீர்ர்களை உறையாடப்பட்டது. அதன் பிறகு மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்கள் உட்பட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கடற்படையின் பாரம்பரிய விருந்து (பராகானா) அனுபவித்தனர். குறித்த விழாவுக்கு இனையாக ஒரு வண்ணமயமான இசை நிகழ்ச்சி இன்றும் இன்று மாலை கொண்டாடப்படும்.

இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் கடற்படையின் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகக் அழைக்க முடியும் இது 1967 ஆண்டு செப்டம்பர் மாதம் 08ம் திகதி லெப்டினன்ட் கமாண்டர் எச்.பி பவுலிஸ் அதிகாரியின் கட்டளைத்தின் தொடங்கியது. இப்போது இந்த நிறுவனத்திக்கு 67 அதிகாரிகளால் கட்டளையளிக்கப்பட்டது. இது மூலம் இலங்கையின் முக்கிய பொருளாதார மையமான கொழும்பு துறைமுகம் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வழங்குக்கிறது. ரங்கல நிறுவனம் முதலில் புனித அந்தோனியார் கேட் (இலக்கம் 4 துறைமுக அணுகல்) அருகில் அமைந்து உள்ளதாவும் பிறகு தற்போது அமைந்துள்ள துறைமுக  வளாகத்தில் நிறுவப்பட்டதாகவும் குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் நம்  நாடு எதிர்கொண்ட அவசர வெள்ளங்கள்,  நிலச்சரிவுகள் ஆகிய அவசர சந்தர்ப்பங்களின் போது நிவாரண உதவி,  மீட்பு கடமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக குறித்த நிறுவனம் முன்னணி எடுத்துள்ளது.