ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ஐக்கிய அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்ளஸ் சி. ஹீஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார். குறித்த நிகழ்வுக்காக ஐக்கிய அமெரிக்கா கடற்படையின் லெப்டினென்ட் கமாண்டர் பிரையன் எஸ் பேஜ் அவர்களும் கழந்துகொன்டார்.

முதலில் அவர்கள் புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். மேலும் இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.