சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (செப்டம்பர் 04) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரகள் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு மீன் சந்தையில் விற்க தயாராக இருந்த 272 கிலோகிராம் சவுக்கு சுறா (Thresher Shark) மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட சவுக்கு சுறா மீன்கள் மற்றும் சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு, பொழுதுபோக்குக்கு மற்றும் விளையாட்டுக்கு மீன்பிடியில் ஈடுபடும் எவருக்கும் “எலோபிடே” வகைக்கு சொந்தமான குறித்த சவுக்கு சுறா மீன்கள் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்த படகு உரிமையாளர்கள் அல்லது மாலுமிகள் இறந்த சவுக்கு சுறா உடல் அல்லது உடலை பகுதி படகில் வைத்திருப்பது, மற்றவொரு படகுகளுக்கு பரிமாற்றுவது, இறக்குதல், சேமிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி இல்லை.

அதின் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கடந்த 03ம் திகதி சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மினவர்ளை மற்றும் 02 படகுளை திருகோணமலை உப்புவேலி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோத 02 வலைகள் 03 நிர் முழ்கி முகமூடிகள், இரு ஜோடி நிர் முழ்கி காலனிகள் மற்றும் பிடிக்கபட்டுள்ள 160 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் ஆராய்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.