கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

இன்று (ஆகஸ்ட் 31) காலையில் கடலில் மூழ்கிக் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 04 இந்திய மீனவர்களை வட கடற்படை கட்டளையின் பீ 494 அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் மிட்கபட்டனர்.

குறித்த படகு இலங்கைக்கு சொந்தமான வட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போது அனலதீவுக்கு மேற்கு திசையில் 8.5 கடல் மைல்கள் தூரத்தில் பாதிக்கப்பட்டு கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்திய படகு மற்றும் மீனவர்களை கவனிக்கப்பட்டது.

கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு 04 மினவர்களயும் மீட்டுள்ளனர். பிரகு அவர்களுக்குத் தேவையான முதல் உதவி, உணவு மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கி காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கு கொண்டு சேர்த்துள்ளனர். வட கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்ட கடற்படை நீர் முழ்கி கிறப்பு குழுவினரால் இப்போது விபத்தான படகு மீட்பு பணிகள் மேற்கொள்கின்றனர். மேலும் இந்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பி மீட்டபட்ட 04 மீனவர்களும் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்புவதுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றது.