பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன கடமையேற்பு
ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 22ம் திகதி முதல் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் பிரகாரமாக இன்று (ஆகஸ்ட் 22) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து அட்மிரல் விஜெகுனரத்ன அவர்களுக்கு 48 பேர் கொன்ட சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அங்கு கடற்படை தலைமை பணியாளர் உட்பட கடற்படை இயக்குனர் ஜெனரல்கள் மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகளினால் அட்மிரல் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட விஜெகுனரத்ன அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பாரம்பரியமாக கடற்படை துரையின் கடமைகள் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களுக்கு வழங்கிய அட்மிரல் விஜெகுனரத்ன அவர்கள் பிறகு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்குச் சென்றார். அங்கு புதிய பாதுகாப்பு படைகளின் பிரதாணிக்கு முப்படையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
மேலும் தாய்நாட்டுக்காக அவரினால் ஆற்றப்பட்ட சேவை, வீரம் மற்றும் துணிகரமான செயற்பாடுகளுக்காக அவருக்கு 'வீரோதார விபூஷணய', 'ரண விக்கிரம பதக்கம்', 'ரணசூர பதக்கம்', "விசிஷ்ட சேவா விபூஷணய' மற்றும் 'உத்தம சேவா பதக்கம்' உள்ளிட்ட பதக்கங்கள் பல வழங்கப்பட்டன.
நாட்டில் நிலவிய யுத்தத்தின் போது அதற்கு சிறப்பாக முகம்கொடுக்கும் வகையில் கடற்படையில் விஷேட படகு படைபிரிவினை உருவாக்கிய பெருமை அடமிரல் விஜேகுனரத்ன அவர்களையே சேரும். மேலும் இவர் 1993 ஆன்டில் மேற்கொள்ளப்பட்ட சுபதல பூநாரைன் நடவடிக்கை உட்பட பல கடற்படை நடவடிக்கைகளுக்காக கட்டளை அதிகாரி ஆனார். மேலும் குறித்த சிறப்பு படையின் நடவடிக்கைகள் அவரது கடற்படை வாழ்க்கையில் இரண்டு (02) முறை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். 1988 அண்டில் இந்திய மரையின் கொமான்டோ வீர்ர்களுடன் மேற்கொன்டுள்ள ‘பவன்’ நடவடிக்கைக்காகவும் கழந்து அதற்க்கான வீர பதக்கத்தை பெற்றுள்ளார்.
அவர் இருதியாக இலங்கை கடற்படையின் கொடி கப்பலான சயுரவின் கட்டளை அதிகாரியாக கடல் கடமைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தளபதி, கொடி அதிகாரி வெளியீடு கட்டளை, இந்தியாவின் இலங்கை உயர் ஸ்தானிகரின் முதல் செயலாளர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர், இயக்குனர் கடற்படை செயல்பாடுகள், (2006 - 2007 மிதக்கும் ஆயுதங்களை அழிப்பதற்கான காலம்), இயக்குனர் கடற்படை சிறப்பு படைகள் மற்றும் கடற்படை கண்காணிப்பு, தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளின் தளபதி, இலங்கை கடலோர காவல்படை இயக்குநர் மற்றும் கடற்படை தலைமை பணியாளர் ஆகிய பதவிகளில் கடமையேற்றினார்.
இவர் 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் 11ம் திகதி முதல் இலங்கை கடற்படை தளபதியாக பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது