கடற்படை கிண்ணம் – 2017, 14 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டி யாழ்ப்பாணத்தில்
வட கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில், 14 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட போட்டி தொடரில் இறுதிப் போட்டி நேற்று (ஆகஸ்ட் 05) யாழ் துரையப்பா மைதானத்தில் மிக பிரமாண்டமான முரையில் நடைபெற்றது.
யாழ் குடாநாட்டை மையப்படுத்தி கடற்படை மூலம் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டி தொடருக்கு பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலாளர் என் வேதனாயஹன் அவர்கள் கழந்துகொன்டார். மேலும் வட மாகாண ஆளுநரின் செயலாளர், இராணுவத்தின் மற்றும் காவல்துரையின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த நிகழ்வுக்காக கழந்துகொன்டனர்.
வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களால் இப் போட்டித்தொடர் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது. இதுக்காக வட மாகாணத்தை குறித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரபலமான 06 பாடசாலைகள் மற்றும் தீவுகளின் 06 சமூக விளையாட்டு அணிகள் குறித்து 14 வயதுக்குட்பட்ட பல விழையாட்டு வீர்ர்கள் பங்குபற்றினர்.
அதன் பிரகாசமாக நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டி தொடரில் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம், புனித பாட்ரிக் கல்லூரி வெற்றி பெற்றது. இப் போட்டியில் இரண்டாமிடம் யாழ்ப்பாண மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. அங்கு, சிறந்த வீரர் கிண்ணம் வீ ரோஹித் வெற்றி பெற்றத்துடன் சிறந்த தடுப்பு வீரரின் கிண்ணத்தை ஏ அனல்ட் வெற்றி பெற்றார்.
தற்போதைய கடற்படை தளபதியின் எண்ணக்கருவின் படி யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து தீவுகளில் வாழ்கின்ற பாடசாலை மானவர்களின் விளையாட்டு திறனை விருத்தி செய்யும் வகையில் 2016 ஆன்டில் கால்பந்து பயிற்சி திட்டமொன்று தொடங்கப்பட்டது, இதுக்காக கால்பந்து விளையாட்டை பற்றி அறிவுள்ள ஒரு அதிகாரி உட்பட 07 கடற்படை விரர்கள் இத் திட்டத்துக்காக இணைக்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்ட தீவுகளின் 200 க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் இப் பயிற்சி திட்டங்களுக்கு கழந்துகொன்டனர். அதே சமயம், பயிற்சி காலத்தில் இந்த குழந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் சக்தியடைந்த பானங்களும் வழங்க கடற்படை நடவடிக்கை மேற்கொன்டுள்ளது. மேலும் விளையாட்டும் போது தேவையான விளையாட்டு காலணிகள், விளையாட்டு உடைகள் மற்றும் அத்தியாவசிய விளையாட்டி பொருட்களும் குறித்த பயிற்சி திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் பாடசாலை பென் குழந்தைகள் இடையில் காற்பந்து விழையாட்டு பிரபலமான விளையாட்டாக்கும் நோக்கத்துடன் மற்றும் குறித்த நிகழ்வு வண்ணமயாக்கும் நோக்கத்துடன் கடற்படை மற்றும் விமானப்படை பெண்கள் கால்பந்து அணிகள் இடையில் கண்காட்சி போட்டியொன்று நடைபெற்றது. இப் பொட்டில் 02 புள்ளிகளால் கடற்படை பெண்கள் கால்பந்து அணி வெற்றி பெற்றது.
மேலும் அனைத்து வெற்றியாளர்களுக்கு மற்றும் அணிகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் இவர்களின் விளையாட்டு திறனை பாராட்டும் வகையில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.