சீன மருந்துவ கப்பலான ஹெபிந்க்பான்க்சு (Ark Peace) கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
சீன கடற்படையின் மருந்துவ கப்பலான ஹெபிந்க்பான்க்சு (Hepingfangzhou) கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட் 06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன.
குறித்த நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சனத் உத்பல அவர்கள் உடபட பல சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர். மேலும் இலங்கையின் வசிக்கும் சீனவர்களும் தனது நாட்டின் கப்பல் வரவேற்பதக்காக துறைமுக வளாகத்துக்கு வந்துள்ளனர்.
உலகம் முழுவதும் அவசர சூழ்நிலைகளில் விரைவில் மனிதாபிமான நிவாரண வழங்குவதுக்காக குறித்த கப்பல் உறுவாக்கப்பட்டுள்ளது. அதி நவீன உயர் தொழில்நுட்ப கப்பலான இக்கப்பல் ‘ஆர்க் பீஸ்’ (Ark Peace) என்றழைக்கப்படும். சீன மக்கள் குடியரசு மூலம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கிய குறித்த மருந்துவ கப்பல் 178 மீட்டர் நீளம் மற்றும் 24 மீட்டர் அகலம் கொன்டுள்ளது. இங்கு 381 ஊழியர்கள் இருக்கின்றனர். இக் கப்பல் உலகம் முழுவதும் விஜயம் செய்துள்ளதுடன் சுமார் 120,000 பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளது. நவீன ஆபரேஷன் தியேட்டர், தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு மருத்துவ சேவைகள், குடியிருப்பு சிகிச்சை அலகுகள், CT ஸ்கேன் இயந்திரங்கள் (Computerized Tomographymachine) உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும் இக் கப்பலில் அடைந்துள்ளது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொன்டு வந்துள்ள இக்கப்பல் நங்கூரமிட்டிருக்கும் காலத்தில் சீன கடற்படையின் கிழக்கு கடற்படை வெழியேறும் கட்டளையில் துனை தலைமை பணியாளர், ரியர் அட்மிரல் குஹான் பெய்லின், கப்பலில் கட்டளை அதிகாரி கேப்டன் குப் பஒபென்க் ஆகியவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை சந்திக்க உள்ளனர்.
மேலும் கப்பலின் மருத்துவ ஊழியர்கள் இலங்கை கடற்படை மருத்துவ பிரிவின் கடற்படையினருடன் இனைந்து பல மருத்துவ முகாம்கள் நடத்த உள்ளன. அதே போன்று இக்கப்பல் பார்வையிட இலங்கை மருத்துவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்த்தக்கது. குறித்த கப்பல் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயாகம் திரும்ப உள்ளன.