இலங்கை கடற்படையின் முதல் நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு
இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்கென நிர்மாணிக்கப்பட்ட நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு இன்று (ஆகஸ்ட் 2) மாலை 0400 மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலமையில் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய துறவிகள் உட்பட மத குருக்கள், அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பொருட்களுக்கான இந்திய பாதுகாப்பு செயலாளர் அசோக் குமார் குப்தா, இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் (ஓய்வு) சேகர் மிட்டல் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
.மேலும் இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்ச், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி, பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர, ஓய்வுபெற்ற கடற்படை தளபதியவர்கள், முப்படை மற்றும் காவல் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் உடபட பல அதிதிகளும் இன் நிகழ்வுக்காக கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வுக்காக வருகை தந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி அவர்களால் புதிய கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் (திசைகாட்டி) நிஷாந்த அமரோசா அவர்களுக்கு கப்பலுக்கான அதிகார பத்திரம் வழங்கப்பட்டது. அவ்வேளை கப்பலின் கட்டளை அதிகாரி குறித்த பத்திரத்தை வாசித்தார். இலங்கை கடற்படை கப்பல் சயுரல பேரில் அதிகார நியமனம் செய்த குறித்த நவீன கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னம் சர்வமத ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உட்பட வருகைதந்திருந்த அதிதிகள் ஆகியோர் கப்பலினை சுற்றிப் பார்வையிட்டனர். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு கப்பலின் செயற்பாடுகள், தயார்நிலை மற்றும் தயாரிப்பு தொடர்பாக கடற்படை தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், அதிமேதகு வென்டருவெ தர்ம கீர்தி ஸ்ரீ ரத்னபால உபாலி அதிதான அனுநாயக்க ஸ்தவிர அமரபுர சிரி சத்தம்மவன்ச மஹா நிகாயெ வணக்கத்கூறிய அஹுன்கல்லெ சிரி சீல விசுத்தி தளபதி மஹ ஸ்தவீர, வட மாகாண பிரதான சங்கநாயக்க நய்நதீவு தலைமை தேரரான சிரேஷ்ட கலாநிதி தர்மகீர்தி ஸ்ரீ வணக்கத்கூறிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர், கலாநிதி எம்மானுவேல் பிரனாந்து அருட்தந்தை மற்றும் பூசாரி ஸ்ரீ எஸ்எஸ் சாம்புசீவாம் குருக்கல மற்றும் அல் ஹஜ் குவாரி மவுலம், எம் பயிசால் ஹசன் அகியவர்களினால் கப்பலுக்கு சர்வமத ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் தேவைப்பாடுகளுக்கு அமைய வெளிநாட்டு கப்பல் நிர்மாணிப்பாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கப்பலாகவும் இந்தியாவால் வெளிநாட்டு கடற்படைக்காகத் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய இராணுவ கப்பலாகவும் குறித்த கப்பல் சாதனையடையும்.நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல், கடந்த ஜூலை 28ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த புதிய தொழில் நுட்ப கப்பல் இலங்கை கடல் பிராந்திய எல்லைக்குள் ரோந்து நடவடிக்கைகள், தேடுதல் நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள், அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் கடல் பிராந்திய சூழல் மாசடைவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற பணிகளை மேற்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது. அத்துடன் இக்கப்பலினால் வெளிவாரி தீயணைப்பு நடவடிக்கைகளுக்கும் உதவ முடியும்.
இந்திய கப்பல் பதிவு நிருவனம் மற்றும் அமெரிக்க கப்பல் பணியகத்தின் விதிகள் படி நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையின் எதிர்கால கொடி கப்பலான குறித்த கப்பல் நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் வசதிகளையும் கொண்டுள்ளது. 105.7 மீட்டர் நீளம் மற்றும் 13.6 மீட்டர் அகலம் கொன்டுள்ள இக் கப்பல் 26 நொட் உயர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக குறிப்பிடத்தக்கது.
மேலும், சாதாரண சஞ்சரிப்பு நேரத்தில் 12-14 நொட் வேகத்தில் பயணிக்ககூடி 7000 கடல் மைல்கள் பயண எல்லையை கொண்டுள்ள இக்கப்பல் இலகு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இலகுரக ஹெலிகொப்ரர் இறங்குதளத்தையும் அது தரித்து வைப்பதற்கான இடத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் இக் கப்பலில் 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 100 கடற்படை சிப்பாய்கள் ஒரேநேரத்தில் தங்குவதற்கான விசாலமான விடுதி மற்றும் பிற வசதிகளையும் கொண்டு காணப்படுகின்றது. மேலும் எதிர்காலத்தில் இக் கப்பலில் மல்டி பெரல் ரொக்கட் லொந்சர் (MBRL) ஒன்றும் நிறுவப்படும்
தன்னுடைய எதிர்கால பணிகள் பற்றி கடற்படை நன்றாக அறிந்துகொன்டுரிக்கின்றன. இலங்கையின் 200 கடல்மைல்கள் கொண்ட பிரத்தியேக பொருளாதார மண்டலம் கண்காணிப்பு மற்றும் 1,738,062.24 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடல் போன்ற கடல் நடவடிக்கைகளில் ஈடுபதுவது கடற்படையின் பொறுப்பாகும். எனவே இக்கப்பல் போன்ற பெரிய உயர் தொழில்நுட்ப கப்பல்கள் மற்றும் படகுகள் வாங்குவது மிகவும் முக்கியமான பணியாகும். 2025 ஆண்டாகும் போது இக்கப்பல் போன்ற 20 கப்பல்களுடன் கடற்படை வலுப்படுத்திக் கொள்வது பற்றி காரனிகள் ‘கடற்படை கடல்சார் மூலோபாயம் 2025’ புத்தகத்தின் வெழிபடுத்தப்பட்டுள்ளன. அதன் பிரகாசமாக தற்போதைய கடற்படை தளபதியின் எண்ணக்கருவின் கீழ் இலங்கை கடற்படைக்கு சேர்ந்துள்ள முதல் கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சயுரல இலங்கை கடற்படை வரலாற்றின் எலுதப்படும்
மேலும் இலங்கை கடற்படைக்காக நிர்மானிக்கப்படுகின்ற இரன்டாவது நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் அடுத்த ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படுவதாக குறிப்பிடதக்கது.