சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிளையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கடற்படை தளபதியவர்களால் திரந்து வைப்பு
இலங்கை கடற்படையின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிளையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (ஜூலை 25) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இன் நிகழ்வுக்காக பணிப்பாளர் நாயகம் பொருட்கள் மற்றும் சேவைகள் ரியர் அட்மிரல் நிஹால் பிரனாந்து, கடற்படை தளபதியின் செயலாளர் மற்றும் கடற்படை செயலாளர் பணிப்பாளர் நாயகம் (வரவுசெலவு மற்றும் நிதி), கடற்படை இயக்குனர் (வெளிநாட்டு வாங்குவதல்), கடற்படை இயக்குனர் (வரவுசெலவு) ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர்.
‘pay.navy.lk’ இணைய முகவரியாக (Web address) வலைத்தளத்தில் அணுக முடியும். இது மூலம் கடற்படை உருப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பற்றி தேவையான அனைத்து விடயங்களும் பெறும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துடன் திறமையான சேவை மேலாண்மை அமைப்பு முறை உறுவாக்கி தாய்நாடுக்காக உயிரிழந்த மற்றும் முடக்கப்பட்ட கடற்படையினர்களின் பயனாளிகள், ஓய்வு பெற்ற கடற்படையினர்கள், சேவையில் ஈடுபட்டுருக்கும் கடற்படையினர்கள் உட்பட அனைத்து கடற்படையினர்களுக்கும் தேவையான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பற்றிய அனைத்து விடயங்களும் வழங்குவது குறித்த வலைத்தளத்தில் நோக்கமாகும்.