2 வது தெற்காசிய நிபுணர்களுடைய டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் வெற்றியாளர்கள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

2 வது தடவயாக நடைபெற்ற தெற்காசிய நிபுணர்களுடைய டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் வெற்றிப்பெற்ற கடற்படையினர்கள் இன்று (ஜூலை 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர். அங்கு அவர்களை பாராட்டிய கடற்படை தளபதி அவர்களுக்கு பரிசுகளும் வழங்கியுள்ளார். குறித்த நிகழ்வுக்காக டேபிள் டென்னிஸ் அணியின் செயலாளர், கேப்டன் அனில் போவத்த அவர்களும் கழந்துகொன்டார்.

கடந்த ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 23 வரை கல்கிஸ்ஸ செயின்ட் தாமஸ் கல்லுரி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற குறித்த போட்டி தொடருக்காக இலங்கை கடற்படை பிரதிநிதித்து வயது 40 க்கு மேப்பற்ற பிரிவில் இரன்டு அணிகள் மற்றும் வயது 50 க்கு மேப்பற்ற பிரிவில் ஒரு அணியும் கழந்துகொன்டன.

அதின் பிரகாசமாக கடற்படை வீரர் பீடிஐபீ சில்வா வயது 40 க்கு மேப்பற்ற பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இது இலங்கைக்காக பெற்ற ஒரே தங்கப்பதக்கமாகும் மேலும் இப் பொட்டி தொடரில் டேபிள் டென்னிஸ் இரட்டை பிரிவின் இரண்டாமிடம் வெற்றி பெற்று வெள்ளி பதக்கத்தை பிரதான சிரிய அதிகாரி ஜிடிஎடி பிரசன்ன மற்றும் சாதாரன வீர்ர் பீடிஐபீ சில்வா ஆகியவர்கள் பெற்றுள்ளனர். டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவு பிரதிநிதித்த கேப்டன் பூஜித விதான, லெப்டினன்ட் பிரசாத் சில்வா, பிரதான சிரிய அதிகாரி ஜிடிஎடி பிரசன்ன மற்றும் சாதாரன வீர்ர் பீடிஐபீ சில்வா ஆகியவர்களால் அணிகள் பிரிவின் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளனர்.

குறித்த போட்டி தொடருக்காக இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், மாலத்தீவு மற்றும் நேபால், ஆகிய நாடுகள் பிரதிநிதித்து 226 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இப் போட்டி தொடருக்கு கழந்துகொன்ட இலங்கை போட்டியாளர்கள் இடையில் அதிக பதக்கங்களை கடற்படையினரால் பெற்றுள்ளது.