நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுவதற்கான இரண்டாவது கட்டம் ஆரம்பித்துள்ளது
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக சிறுநீரக நோய் ஆபத்தான பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்குவது அறிமுகப்படுத்த முடியும். அதின் இரண்டாவது கட்டமாக பானம, உகந்தை புனித பூமியில், வவுனியா குருதுபிடிய, இலங்கை கடற்படை கப்பல் பட்டறையில் (02 இயந்திரங்கள்), இலங்கை கடற்படை கப்பல் அக்போ மற்றும் கோடைம்பர நிருவனங்களில் மேலும் 06 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று (ஜூலை 22) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் கடற்படை சமுக நலத் திட்டம் மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.இது மூலம் அப் பகுதியில் 625 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன. மேலும் கடற்படை முகாம்களின் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 4281 கடற்படையினர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படுகிறது.

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுகின்றன.இது வரை 236 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 112,416 குடும்பங்களுக்கு மற்றும் 80,185 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.