இலங்கை கடற்படை தன்னுடைய மிகப்பெரிய தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பெறுகிறது
இலங்கை கடற்படைக்காக இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிர்மானிக்கப்பட்ட முதலாம் தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 22) ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இந்தியாவின் இலங்கை உயர் ஆணையாளர் அதிமேதகு திருமதி சித்ராங்கனி வாகீஷ்வர மற்றும் இலங்கை கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க ஆகியவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் தயாரிக்கும் பணிகள் 2014 ஆன்டில் இலங்கை கடற்படை மூலம் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கப்பலின் அடிப்பகுதி (keel) தயாரிப்பு 2014 செப்டம்பர் மாதம் 10ம் திகதியும் முன்னோட்டம் நிகழ்வு 2016 ஜூன் மாதம் 10ம் திகதியும் நடைபெற்றது. மேலும் 2017 ஆகஸ்ட் 02ம் திகதி குறித்த கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரம் நியமனம் செய்தல் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலமையில் கொழும்பு துறைமுக வளாவில் நடைபெறவுள்ளன.
குறித்த புதிய தொழில் நுட்ப கப்பல் இலங்கை கடல் எல்லைக் குழ் ரோந்து பணிகள், தேடுதல் நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண மற்றும் பேரழிவு பதில் நடவடிக்கைகள் மற்றும் கடல் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.
105.7 மீட்டர் நீளம் மற்றும் 13.6 மீட்டர் அகலம் கொன்டுள்ள கப்பலில் உற்பத்திக்கான செலவு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அத்துடன் இக்கப்பலானது ஹெலிகொப்டர் இறங்கு தளத்தைக் கொண்டிருப்பதுடன் ஒரு மணி நேரத்திற்கு 24 கடல்மைல் அதிகபட்சவேகத்துடன் சுமார் 2350 தொன் கொள்திறன் கொண்டது. இக் கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 12-14 கடல்மைல் வேகம் பராமரித்து 4500 கடல்மைல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான திறனைக் கொண்டுள்ளது. மேலும் இக் கப்பலில் 18 அதிகாரிகள் மற்றும் 100 விர்ர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.
குறித்த நிகழ்வுக்காக அட்மிரல் (ஓய்வு) அருண் பிரகாஷ், கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் (ஓய்வு) சேகர் மிட்டல், கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் (ஓய்வு) வீநித் பக்ஷி மற்றும் இலங்கை, இந்திய கடற்படைகளின் மற்றும் கடலோரக் காவல்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர்.