பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இசுமோ கப்பலுக்கு விஜயம்
 

நல்லெண்ண நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இசுமோ கப்பலை பார்வையிடவென இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். குறித்த நிகழ்வுக்காக பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன ஆகியவர்களும் கழந்துகொன்டன. மேலும் இலங்கையில் ஜப்பான் தூதர் அதிமேதகு கெனசி சுகனுமா உட்பட ஜப்பான் பிரதிநிதிகள் குழுவும், கடற்படை தலைமையகத்தில் சிரேஷ்ட அதிகாரிகளும் இன் நிகழ்வுக்காக கழந்துகொன்டனர்.

குறித்த கப்பலை பார்வையிடுவதற்கென அங்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை அங்கு ஜப்பான் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அதிமேதகு ஹிரோயுகி மியன்காவா சகல கடற்படை மரியாதைகளுடன் வரவேற்றார். முதல் கடற்படை பாதுகாப்பு பிரிவின் தளபதி ரியர் அட்மிரல், யொஷிஹிரோ கோகா, இசுமோ மற்றும் சசனமி கப்பல்களில் கட்டளை அதிகாரிகளான கேப்டன் யொஷிஹிரோ கய், கொமான்டர் ஹிரோடகா ஒகுமுரா ஆகியவர்கள் உட்பட கப்பலில் பல அதிகாரிகள் குறித்த நிகழ்வுக்காக கழந்துகொன்டனர்.

கப்பலை சுற்றிப்பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் உடபட குழு குறித்த கப்பலின் அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேலும் இவர்கள் ஒரு குழு புகைப்படத்துக்கு சமூகமளித்தார்கள்.