கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகின் புதிய கட்டிடம் கடற்படை தளபதி அவர்களால் திறந்து வைப்பு
 

வெலிசர கடற்படை முகாமில் நிறுவப்பட்டுள்ள கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகின் புதிய கட்டிடம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் இன்று (ஜூலை 12) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் கடற்படை தளபதியாக பொருப்பேற்ற பின் அவரின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு முதன்மை கொன்டு பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பொலுது (பொறியியல்) பிரியங்கர திசாநாயக்க அவர்கள் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகின் தளபதியாக இருகின்றார். அவர் தன்னுடைய பொறியியல் அறிவு பயன்படுத்தி மற்ற கடற்படையினருடன் இனைந்து மிகவும் குறைந்த செலவில் உயர் மட்ட சார்ந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை தயாரித்துள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ் இது வரை நாட்டின் 11 மாவட்டங்கள் உள்ளடக்கி 230 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிருவப்பட்டு 107,510 குடும்பங்களுக்கு மற்றும் 80,185 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். குறித்த செயல் திட்டம் மேற்கொள்ளும் போது நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பராமரிப்பு, சரிசெய்தல் மற்றும் நீர் மாதிரி பரிசோதனை ஆகிய நடவடிக்கைகளுக்காக ஒரு கட்டிடம் தேவையாக உள்ளது. அதின் பிரகாசமாக இன்று (12) திறந்து வைக்கப்பட்டுள்ள குறித்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலம் நாடு முலுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பராமரித்தல் சரிசெய்தல் மற்றும் நீர் மாதிரி பரிசோதனை ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கடற்படையின் திறன்களை மேலும் அபிவிருத்தி செய்வதுக்காக கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மேற்கொள்ளப்படுகின்ற குறித்த நடவடிக்கைகளும் கேப்டன் பிரியங்கர திசாநாயக்க உட்பட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகின் கடற்படை ஊழியர்களுக்கும் கடற்படை தளபதி தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.குறித்த நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல, இயக்குனர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.