கடலில் மூழ்கிய யானை மீட்கப்பட்டுள்ளது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் நேற்று (ஜூலை 11) காலை கோகிலாய் பகுதி கோக்குதுடுவாய் இருந்து 08 கடல்மைல்கள் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானை ஒன்றின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளது.

ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த துரித தாக்குதல் படகு மூலம் கடற்பரப்பில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானை கன்டுள்ளது. நிர்க்கதிக்குள்ளான குறித்த யானை தொடர்பான மீட்புப்பணியில் கடற்படைக்குச் சொந்தமான அதிவிரைவு தாக்குதல் படகு மற்றும் செட்ரிக் படகுகளுடன் 07 கடற்படை சுழியோடிகள் ஈடுபட்டனர். அத்துடன் வனஜீவராசிகள் பரிபாலன திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்றும் குறித்த மீட்பு பணிகளில் இணைந்து செயற்பட்டனர்.

கடற்படை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குழுவினரது அயராத முயற்சியின் பயனாக கடற்கரைக்கு திசை திருப்பப்பட்ட குறித்த யானை புல்மோட்டை யானு ஓயா பிரதேச வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.