அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

அவுஸ்திரேலிய கடற்படையின் பிகெட் வகையில் (ANZAC – Class Frigate) கப்பலான (எச் எம் ஏ எஸ்) “அருண்டா” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (10) கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கைகடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளது

118 மீட்டர் நீளம் மற்றும் 14.8 மீட்டர் அகலம் கொண்டகுறித்த கப்பலில் சுமார் 24 அதிகாரிகளும்166கடற்படை வீர்ர்களும்வருகைதந்துள்ளனர்.அதின் பிரகாசமாக கப்பலின் கட்டளை அதிகாரியான கமான்டர் சி டப் ஆர் ஸ்டீல் அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மேற்குக் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்ளை சந்தித்தனர்.

மேலும், 4 நாற்கள் விஜயம் மேற்கொன்டுள்ள இக்கப்பல்களின்சிப்பந்திகள் இங்கு தரித்திருக்கவுள்ள காலத்தில் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினைபலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கலாச்சார நிகழ்வுகள்உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.குறித்த கப்பல் இம் மாதம் 14 திகதி தீவிலிருந்து புறப்பட உள்ளது.

அத்துடன் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தநிவாரண உதவி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலிய நாட்டுஅரசாங்கத்தினால் 10 சிறிய ரக வள்ளங்கள் வழங்கி வைக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.