சூரியவெவ, மீகஹயதுர பகுதியில்நிருவப்பட்டநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திபிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (09)சூரியவெவ, மீகஹயதுர பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதியின் கருத்துபடி சிறுநீரக நோய் ஆபத்தான பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்குவதுக்காக கடற்படையினர் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொழும்பு கங்காராம ஆலயம் மூலம் கொழும்பு ரோட்டரி கழகத்தின் (Rotary club of Colombo center) நிதி பங்களிப்பின் நிருவப்பட்டுள்ளது. நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 450 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதிபெருகின்றன.குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் ஒரு தினத்துக்கு 10,000 லீட்டர் சுத்தமான குடிநீர்வழங்கப்படுகிறது.
கடற்படை ஆராய்ச்சி மற்றும்அபிவிருத்தி பிரிவின் அறிவுமற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களுக்குசுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் நீர்சுத்திகரிப்புநிலையங்கள் நிருவப்படுகின்றன.இது வரை 228நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 108,435குடும்பங்களுக்கு மற்றும் 80,185 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்குசுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகையபல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.