தலசீமியா வட்டத்தின் பிரதிநிதிகள் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

தலசீமியா நோயாளிகளுக்காக விளைவான தலசீமியா வட்டத்தின் பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை நேற்று (29) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். தலசீமியா நோயாளிகளின் இரத்த அயனிகள் அகற்றப்பட்டு இரத்தம் சுத்தமாகும் டிபெரொக்சமயின் இன்பியுசன் இயந்திரம் (Deferoxamine Infusion Pump) தயாரித்து அவர்களுக்கு வழங்கியது சம்பந்தமாக அனைத்து கடற்படையினருக்கும், கடற்படை தளபதிக்கும் அவர்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.

தலசீமியா ஊசி இயந்திரங்கள் வழங்கும் இலங்கையின் ஒரே வழங்குவாலர் இலங்கை கடற்படை ஆகும். இயந்திரத்தினால் குறித்த நோய் மூலம் ஏற்படும் இரத்த கோளாறு தடுக்கபடும். குறித்த கடுமையான காரியத்திற்காக இலங்கை கடற்படை மூலம் இது வரை 1521 தலசீமியா ஊசி இயந்திரங்கள் நோயாளிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

மே 8 ஆம் திகதி ஈடுபட்டுருந்த உலக தலசீமியா தினத்துக்கு இணையாக சுதேச மருத்துவத்துறை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அமைச்சர் கெளரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவருடைய தளமையில் கண்டி போதனா வைத்தியசாலை வளாகத்தில் தலசீமியா மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவுக்கு அடிக்கள் நாட்டபட்டுள்ளது.அங்கு அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய கடற்படை தளபதி அவர்களால் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மூலம் தயாரிக்கப்படுகின்ற தலசீமியா ஊசி இயந்திரங்கள் குறித்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார்.

குறித்த தலசீமியா ஊசி இயந்திரத்தின் சராசரி சந்தை மதிப்பு ரூ 75,000 அல்லது 100,000 மற்றும் கொண்டுள்ளது. இலங்கை கடற்படை மூலம் உயர்ந்த தன்மையுடன் குறித்த இயந்திரம் ரூபா 3,500 அல்லது 5,000 செலவில் தயாரிக்கப்படுகின்றது.

சினேகப்பூர்வமான சந்திப்பின் போது கடற்படை தளபதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர் காலத்திலும் கடற்படை மூலம் உதவி வழங்குவோம் என்று கூறினார். கடற்படை மூலம் மேற்கொள்கின்ற பணி பாராட்டிய அவர்கள் நினைவுக் கின்னமும் கடற்படை தளபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.