யாழ் அனலதீவில் கள மருத்துவ மையமொன்று நடைபெறும்
<pகடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் கடந்த 18ம் திகதி யாழ் அனலதீவு சமுதாய மண்டபத்தில் கள மருத்துவ மையமொன்று நடத்தப்பட்டது. குறித்த இம் முகாம் வடக்கு கடற் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மிக சிரப்பாக நடைபெற்றது.
குறித்த இம்மருத்துவ முகாம் மூலம் மீள்குடியமர்ந்த 230 குடும்பங்களில் உருபினர்கள் பயன் பெற்றனர்.மேலும், கடுமையான மற்றும் நாள்பட்ட நோய், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகள், பெண்கள் சுகாதார பராமரிப்பு போன்ற பல் வேறுபட்ட நோய்களுக்கு இலங்கை கடற்படை மருத்துவக் குழுவிரனால் ஆரம்பகட்ட சிகிச்சை வழங்கப்பட்டதுடன் விஷேட மருத்துவ உதவி தேவைப்பட்டவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளது. குறித்த மருத்துவ முகாம் மூலம் நோயாலிகளுக்கு வழங்கிய மருந்துகள் மற்றும் கூடுதல் ஊட்டச் சத்துகள் இலங்கை திரிபோஷ நிறுவனம், அரச மருந்தக கழகம் ஆகிய நிருவனங்களால் வழங்கப்பட்டமை குறிபிடதக்கது.