அமெரிக்க கடற்படையின் யூஎஸ்எஸ் “லேக் எரை” கப்பலில் விஜயம்
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் கடந்த ஜூன், 11 திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் கப்பல் குழுவினர் பாராட்டும் நோக்கத்தின் இலங்கை வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் திரு ரவி கருணாநாயக்க அவர்கள் இந்று (ஜூன் 16) குறித்த கப்பலில் விஜயம் செய்துள்ளார்.
மேலும் இன் நிகழ்வுக்காக இலங்கையின் அமெரிக்க தூதுவர் அதுல் கெஷப், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் டி சில்வா மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆட்டிகல ஆகியவர்கள் கழந்துகொன்டனர்.
வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் அவர்கள் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையின் போது வழங்கிய ஆதரவு பற்றி பாராட்டினார். மேலும் இங்கு உரயாடிய இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் அமெரிக்கா மரையின் படையுடன் இனைந்து செயற்பாடுகளின் ஈடுபடுவது பெறுமை என்று கூறினார்.
அமெரிக்க யூஎஸ்எஸ் “லேக் எரை” கப்பல் இரண்டு வார பேரழிவு நிவாரண நடவடிக்கைகாக வருகை தந்துள்ளது.அவர்களின் உதவியுடன் 324 கிணறுகள் மற்றும் 04 பாடசாலைகள் சுத்திகரித்தலில், 04 தொட்டி சுவர் புனரமைப்பு நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க யூஎஸ்எஸ் “லேக் எரை” கப்பல் வரும் 25 திகதி தாயாகம் திரும்ப உள்ளன