கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து மேலும் அனர்த்த நிவாரணப்பணிகளில்
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து நேற்று (ஜூன் 15) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளின் ஈடுபட்ட்ள்ளனர்.
12 கடற்படை மரையின் வீர்ர்கள் மற்றும் 58 அமெரிக்க கடற்படை வீர்ர்கள் இணைந்து காலி ஹினிதும மல்லிகா நவொத்யா பாடசாலை மற்றும் மாபலகம மத்திய மஹா வித்தியாலயம் சுத்தம் செய்தல் நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இனையாக 40 கடற்படை மரையின் வீர்ர்கள் மற்றும் 64 அமெரிக்க கடற்படை வீர்ர்கள் இணைந்து மாத்தறை திஹகொட பகுதியில் தொட்டி சுவர் புனரமைப்பு நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலநேற்று ( ஜூன், 11) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது