ரஷ்ய பாய்மரக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான “நடேஸ்டா” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜூன் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மேலும், குறித்த இக்கப்பலில், புகைப்படக் கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியினை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு அலெக்ஸ்சாண்டர் கார்ச்சவா உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கவுள்ளார். குறித்த நிகழ்வுக்காக இலங்கை கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க, மேற்குக் கடற்படை கட்டளையின் தளபதி நிராஜ் ஆடிகல, ரஷிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி ஏ மிகாய்லோவிச்கி ஆகியவர்கள் உட்பட பல அதிகாரிகள் கழந்துகொள்ள உள்ளனர்.
இக்கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள எதிர் வரும் 15,16 மற்றும் 17 ஆன மூன்று நாட்களில் குறித்த கண்காட்சியினைப் பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது.மேலும் இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
200 ஆண்டுகளுக்கு முன்பு ரஷிய மாலுமிகளான இவான் க்றுசென்ஷ்டர்ன் மற்றும் யூரி லிசியான்ச்கி தலைமையின் கீழ் உலகம் முழுவதும் சுற்றுப்பயணித்த “நடேஸ்டா” கப்பல் நினைவு கூற மூன்று பாய்மரவுள்ள குநித்த கப்பல் அதே பேரில் அழக்கப்படுகிறது.