பாகிஸ்தானிய கடற்படை தளபதி அதிமேதகு ஜனாதிபதிவுடன் சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகள் தளபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை மஹகமசேகர திருவில் உள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (ஜூன் 13) சந்திதித்துள்ளார். இன் நிகழ்வுக்கு இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களும் கழந்துக்கொன்டார்.
இச்சந்திப்பு பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ராணுவ உறவுகள் மற்றும் இரு நாடுகள் இடையே நீண்ட கால அரசியல் மற்றும் கலாச்சார உறவுகள் சம்பந்தமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கருத்துக்கள் வெளியிட்டார். இங்கு கருத்துக்கள் வெளியிட்ட பாகிஸ்தானிய கடற்படை தளபதி அவர்கள் பாக்கிஸ்தானில் நீண்டகால நண்பரான இலங்கை மற்றும் இலங்கை கடற்படைக்கு
எந்த நேரத்திலும் ஆதரவளிப்பதற்காக பாகிஸ்தான் கடற்படை தயாராக உள்ளது என்று கூறினார்.
குறித்த நிகழ்வுக்காக இலங்கையின் பாக்கிஸ்தான் துணை உயர் ஆணையர் கலாநிதி சப்ராஸ் அகமது கான் சிப்ரா பாகிஸ்தான் கடற்படை தளபதியின் செயலாளர் கொமடோர் ஜாவேத் இக்பால் மற்றும் இலங்கையின் பாக்கிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் இர்ஷான் கான் ஆகியவர்கள் கழந்துகொன்டனர்.