மேலும் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (ஜூன்13) தெனியாய,மெரவக பகுதியில் மற்றும் அனுராதபுரம் வித்யார்த பிரிவெனத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த கடும் மழையால் பல பகுதிகளில் மக்களின் சுத்தமான குடிநீர் வசதிகள் மாசடைந்தன. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கோரிக்கையின் கீழ் கடற்படைத் தளபதி வழிமுறைகள் படி கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் மொரவக பகுதியில் கையடக்க நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று நிருவப்பட்டுள்ளன. கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் குறித்த பகுதிக்காக சிறுகிய காலத்துக்குள் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று நிருவப்பட்டுள்ளன. அது மூலம் சுத்தமான குடிநீர் வசதி சுமார் 600 மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும் அனுராதபுரம் வித்யார்த பிரிவெனத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் பிரிவெனத்தில் கல்வி கற்கும் 100 மானவர்கள் சுத்தமான குடிநீர் வசதி பெறுகின்றனர். குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது
இது வரை 211 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 102685 குடும்பங்களுக்கு மற்றும் 76520 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.