வவுனியா பல்கலைக்கழகத்தில் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று (20) வவுனியா, பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் நீர் பிரச்சினை கடற்படையினறால் தெரிந்து கொன்டபின்னர் கையடக்க நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று பயன்படுத்தி மானவர்களின் நீர் பிரச்சினை தீர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது.பிறகு கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் சிறுகிய காலத்துக்குள் இரன்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிருவப்பட்டு மானவர்களின் நீர் பிரச்சினை தீர்க்கபட்டுள்ளது.
குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 11 மாவட்டங்கள் முழுவதும் கொண்டிருக்கின்ற சிறுநீரக நோய் தடுக்க அதிமேதகு ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிருவப்பட்டு சுத்தமான குடிநீர் வசதி மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இது வரை 209 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 102085 குடும்பங்களுக்கு மற்றும் 76420 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.