96 கடற்படையினரின் வெளியேறும் நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படை தளபதி பங்கேற்பு
 

55வது கடட் உள்ளீர்ப்பு மற்றும் 01/2016 சேவை உள்ளீர்ப்பு அங்கத்துவத்தின் பிரகாரம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் 30வது மற்றும் 31வது ஆட்சேர்ப்பில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் ஆகிய துறைகளில் கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேறும் நிகழ்வு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் அணிவகுப்பு மைதானத்தில் நேற்று (ஜூன், 11) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின்பேரில் பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

சகாவுல்லாஹ் அவர்கள், கடற்படை தளபதியின் தலைமைச் செயலாளர், கொமடோ ஜாவித் இக்பால் மற்றும் பாகிஸ்தான் கடற்படை கல்வியகத்தின் கொமடான் கொமடோ அத்னான் அஹமத் ஆகியோருடன் இம்மாதம் 10ம் திகதி இலங்கைக்கான உத்தியோக பூர்வ வியஜமொன்ரை மேற்கொண்டுள்ளார்கள்.

‍குறித்த நிகழ்வின் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் முதலில் இன் நிகழ்வுக்கு அழைப்பிதள் சம்பந்தமாக இலங்கை கடற்படை தளபதி அவர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்தார்.அதன் பிரகு புதிதாக வெளியேறும் அதிகாரிகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை வழங்கிய இவர் கடற்படைக்கு தன்னுடைய பிள்ளைகள் ஒப்படைத்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இன்றய தினம் வெளியேறிய அதிகாரிகளை உரையாற்றிய இவர் வெற்றிகரமான கடற்படையின் பங்குதாரர்கனை தன்னுக்கு வழங்கபட்டுள்ள பொறுப்பை அறிந்திருக்க வேண்டும் என்றும் தன்னுடைய தலைமைத்துவம், திறன்கள், உடல் தகுதி மற்றும் மன நலத்தின் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்

இரு நாடுகள் இடையில் நீண்ட கால வரலாற்று நட்பை கூறிய இவர் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மதிப்புகள் மற்றும் பரஸ்பர மரியாதை பகிர்ந்து கொள்ள மற்றும் கடல்சார் நல்வாழ்வை நிறுவுவதற்காக மேலும் ஆதரவு வழங்குவொம் என்று கூறிய இவர் கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவுக்கு அவரது பாராட்டு வழங்கினார்.

குறித்த நிகழ்வுக்காக மதிப்பிற்குரிய துறவிகள் உட்பட குருக்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்கள், கடற்படை தலைமை பணியாளர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், கிழக்குக் கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்கள், கடற்படை பணிப்பாளர் நாயகம் கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் தளபதி கொமடோர் ரோஹித்த பெரேரா முப்படைகள் மற்றும் போலீஸ் மூத்த அதிகாரிகள் மற்றும் வெளியேறும் அதிகாரிகளின் பெற்றோர்கள் கழந்துகொன்டனர்.

331வது தேர்வாணையம்- கொத்தலாவல பல்கலைக்கழகம்

   
சிறந்த மத்திய அதிகாரி (கவுரவ வாள்)   மத்திய அதிகாரி சி எஸ் சேரசிங்க
தொழில்முறை பாடங்களில் மிக
அதிகமான என் பெற்ற மத்திய அதிகாரி
  மத்திய அதிகாரி சி எஸ் சேரசிங்க

ஒட்டுமொத்த பாடங்களில் மிக
அதிகமான என் பெற்ற மத்திய அதிகாரி

  மத்திய அதிகாரி சி எஸ் சேரசிங்க
சிறந்த துப்பாக்கி வீரர்   மத்திய அதிகாரி எச் ஏ ஐ டி ஹெட்டியாராச்சி
சிறந்த விழயாட்டு வீரர்   மத்திய அதிகாரி ஓ எஸ்.எஸ் தன்னொருவ

 

55 தேர்வாணையம் - கேடட் அதிகாரி

   
சிறந்த மத்திய அதிகாரி (கவுரவ வாள்)   மத்திய அதிகாரி பி எஸ் எஸ் கோமஸ்
தொழில்முறை பாடங்களில் மிக
அதிகமான என் பெற்ற மத்திய அதிகாரி
  மத்திய அதிகாரி எச் எம் பி யு சேனாரத்ன
கடல்சார் பாடங்களில் மிக அதிக என்
பெற்ற மத்திய அதிகாரி
  மத்திய அதிகாரி எச் வீ கொதலாவல
சிறந்த துப்பாக்கி வீரர்   மத்திய அதிகாரி கே.ஜி. ஜயசிங்க
சிறந்த விழயாட்டு வீரர்  

மத்திய அதிகாரி எச் டி என் பிரசாத்

     

கடற்படை கலாச்சார குழு மூலம் வழங்கப்படுள்ள வண்ணமயமான கலாச்சார நிகழ்வுகளுடன் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதையுடன் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வு முடிவடிந்தது.