மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று (ஜூன் 04) 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப் பட்டுள்ளது.
அதன் மற்றுமொரு திட்டமாக. மதவாச்சி, தம்மன்னாகுலம், திருகோணமலை மஹதிவுல்வெவ, இந்த்ர்ராம விஹாரய மற்றும் கோமரன்கடவல ஸ்ரீ ரதனஜோதி வித்தியார்த பிரிவென ஆகிய பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்பட்டுள்ளன. நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் மதவாச்சி, தம்மன்னாகுலம் கிராமத்தில் வசிக்கின்ற 350 குடும்பங்களும் மஹதிவுல்வெவ, இந்த்ர்ராம விஹாரய பகுதியில் வசிக்கின்ற 320 குடும்பங்களும், ரதனஜோதி வித்தியார்த பிரிவெனயின் 70 பௌத்த துறவிகள் மற்றும் 350 பயிற்சி பெற்றவர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தங்கள் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறன் சாதகமாக பயன்படுத்தி குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலணி மற்றும் கடற்படை இதுக்காக நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் தம்மன்னாகுலம் கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான நிதி அனுசரணை பயர் ஃப்ளை மிஷன் சிங்கப்பூர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இது குறித்த நிறுவனத்தினால் நிதி அனுசரணை வழங்கப்பட்டுள்ள 06 வதான நீர் சுத்திகரிப்பு இயந்திரமாகும். ஸ்ரீ ரதனஜோதி வித்தியார்த பிரிவெனத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் சூரிய ஆற்றலால் செயல்படுத்தபடுவது மற்றொரு அம்சமாகும்.
இது வரை 207 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன 102085 குடும்பங்களுக்கு மற்றும் 75420ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.