நிவாரண சேவைகளுக்காக பங்களித்த கடற்படை ஊழியர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு
 

இலங்கையில் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்க முன்வந்துள்ள இலங்கை கடற்படையின் அனைத்து கடற்படை ஊழியர்களுக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 05) காலை கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற விழாவின் போது குறித்த சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கப்பட்டன. 

குறித்த விழாவுக்கு கடற்படை தளபதி வருகை தந்த பின் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் உயிர்களை இழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை கூறி ஒரு நிமிட மவுனம் நடைபெற்றது. 

இன் நிகழ்வில் உரையாடிய கடற்படை தளபதி ஆபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு பனிகள் நினைவு கூறினார்.மேலும் உரையாடிய கடற்படை தளபதி அவர்கள் மூன்று பத்தாண்டுகளால் தாய்நாடு காப்பாற்றுவதுக்காக கடற்படை வழங்கிய பங்களிப்பை பாராட்டினார்.பொது மக்களின் எந்த பேரழிவு அல்லது அவசர துயரத்தில் அதற்காக கடற்படையின் பங்களிப்பு,உதவி பற்றி அவரது உணர்வை கூறினார்.மக்களுடைய பனத்தால் வாழும் படைகள் சமூகம் காப்பாற்றுவதின் உரிமையை நினைவு கூறப்பட்டார். 

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு மற்றும் நிவாரண வசதிகள் வழங்குவதில் காட்டிய அர்ப்பணிப்பு ஆதரவு சம்பந்தமாக இவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வழங்கப்பட்டுள்ளது. உயிர்களை இழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிறைவேற்றபட்ட உடனடி நடவடிக்கைகள் மூலம் நடக்க இருந்த பேரழிவு குறைக்க கடற்படை ஊழியர்களுக்கு முடிந்தது.

ஒவ்வொரு பிரிவினால் மேற்கொள்ளபட்டுள்ள பணிகள் தனித்தனியாக மதிப்பிடப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவுகளுக்கு சிறப்பு படகு படை, உடனடி பயன்படுத்தல் படை, மரைன் படை,நீர் முல்கி மற்றும் மருத்துவம் பொறியியல் மற்றும் வழங்கல் ஆகிய பிரிவுகள் உள்ளடங்கியது.

கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க,துனை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரசைரோ, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் டி சில்வா, பணிப்பாளர் நாயகம் கடலோரக் காவல்படை ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி நிராஜ் ஆட்டிகல, தெற்குக் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகிய அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல வீர்ர்கள் இன் நிகழ்வுக்காக கழந்துகொன்டனர்.

'