சிறு மற்றும் மகா இராவணன் கடல் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.
சிறு மற்றும் மகா இராவணன் கடல் பாதுகாப்பு மாநாடு இன்று (24) கொழும்பு கலங்கரை விடுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.குறித்த மாநாட்டில் தலைமை அதிதியாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பங்கேற்றார். இரண்டாவது முறையாக நடைபெற்ற மாநாடு கடற்படை தளபதியின் வழிமுறைகள் படி இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறு மற்றும் மகா இராவணன் கடல் பாதுகாப்புத் திட்டத்தின் அழைப்பாளர் கியாஸ் டீன் அவருடைய கோரிக்கையின் படி இந்த ஆண்டு மாநாட்டில் வெற்றிக்காக இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் அவர்களது அதிகபட்ச பங்களிப்பு வழங்கப்பட்டது.
இதின் முதல் கட்டம் 2014 ஆம் ஆண்டில் கிரிந்தையில் நடத்தப்பட்டுள்ளது.அது மூலம் மகா இராவணன் கோட்டை அருகே கடலில் உள்ள மூழ்கிய மூன்று கப்பல்களின் பாதுகாப்புக்காக முறையான கவனம் செலுத்த திரமை கிடைத்தது.மேலும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலையீடு மத்தியில் கடற்படை “ஸ்கூபா” நீர்மூழ்குபவர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைள் மூலம் சட்டவிரோதமாக மீன் இனங்கள் அகழ்வை தடுக்க முடிந்தது.
இலங்கையில் கடல்வழி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் நோக்கத்தின் இந்த ஆன்டு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாநாட்டுக்காக வன பாதுகாப்பு திணைக்களம், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மையம், இலங்கை காவல் துறை மற்றும் மேலும் பல நிறுவனங்களைக் குறிப்பிட்டு வந்துள்ள பிரதிநிதிகளால் அவர்களின் விளக்கக்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் டி சில்வா, மேற்கு கடற்படை பகுதி தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரியர் அட்மிரல் (ஓய்வு) பீ ஏ டி.ஆர் பெரேரா, நாரா நிருவனத்தின் தலைவர் கலாநிதி அனில் பிரேமரத்ன கடலோர மற்றும் கடற் திட்டம் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன் ராஜசூரிய ஆகியவர்கள் மற்றும் மேலும் பல புகழ்பெற்ற விருந்தினர்கள் குறித்த நிகழ்வுக்காக கழந்துகொன்டர்.
தற்போதைய கடற்படை தளபதி அவர்கள் அப்பொலுது தலைமை பணியாளராக இருக்கும் போது குறித்த மாநாடு முதல்தடவயாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.