இந்திய கடற்படை கப்பல் “சுமேதா” வெற்றிகரமான விஜயத்தின் பின் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டும்
 

இந்திய கடற்படையின் ஆழ்கடல் பகுதி ரோந்து உயர் தொழில்நுட்ப கப்பலான “சுமேதா” மூன்று நாட்கள் விஜயத்தின் பின் இன்று(24) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி பிரியாவிடை அளிக்கப்பட்டது.

இம் மாதம் 21ம் திகதி இருந்து இன்று வரை இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள காலத்தில் குறித்த கப்பலில் சிப்பந்திகளுக்காக பல பயிற்சிகள், உட்பட பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பல விளையாட்டு போட்டிகள் ஏற்பாடுசெய்யப்பட்டது.

இதற்கு இனையாக நேற்று (23) திகதி பாதிக்கப்பட்டுள்ள கப்பலை இழுத்து செள்வது. கப்பல்கள் இடையில் பொருட்கள் பரிமாற்றும் போது கயிறு பயன்படுத்தி தூரம் மற்றும் இடம் பராமரித்தல், தீயணைக்கும் மற்றும் பேரழிவு மேலாண்மை ஆகிய பயிற்சிகள் நடத்தப்பட்டன.

குறித்த சுமேதா கப்பல் போன்ற இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற உயர் தொழில்நுட்ப இரு கப்பல்கலும் உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் உணரிகள் கொண்டுள்ளது

மேலும் கடந்த ஆண்டில்(2016) 57 போர்கப்பல்களும் இந்த ஆணடில் 20 போர்கப்பல்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.