பாதிக்கப்பட்ட மீன்பிடி படகு கடற்படை உதவியின் தரைக்கு
 

பாதிக்கப்பட்டு கடலில் தனித்திருந்த “திலக் 1” மீன்பிடி படகு பாதுகாப்பாக தரை சேற்க்க கடற்படை இன்று (20) ஆதரவளித்தது. காலி மீன்பிடி துறைமுகத்திருந்து கடந்த 07ம் திகதி 06 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற குறித்த படகு இயந்திரத்தின் ஏற்பட்ட பிழை காரணத்தினால் கடந்த 17 ம் திகதி பாதிக்கப்பட்டுள்ளது.

காலி மீன்பிடி துறைமுகம் மூலம் கடற்படைக்கு வழங்கிய தகவலின் படி இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர கப்பல் அவர்களின் மீட்பு பணிக்காக கடலுக்கு செந்றது.கப்பல் மூலம் மேற்கொள்ளுபட்டுள்ள சோதனை நடவடிக்கைகளில் போது மஹா இராவண கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 72 கடல் மைல்கள் கடல் பகுதியில் குறித்த படகு மற்றும் மீனவர்களை மீட்கபட்டுள்ளது.

அதின் பிரகு ஜயசாகர கப்பலில் கடற்படையினரால் பாதிக்கப்பட்டுள்ள படகில் மீனவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்ட பிரகு அவர்களை கப்பல் மூலம் கொன்டு வந்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சுமார் 01 கடல் மைல்கள் தூரத்தில் மற்றொரு மீன்பிடி கப்பலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.