படைவீரர்களை நினைவுகூறும் தேசிய விழா ஜனாதிபதி தலைமையில்
படைவீரர்களை நினைவுகூறும் தேசிய விழா ஆயுதப்படைகள் தளபதி, அதி மெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (19) பத்தரமுல்ல படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது.குறித்த நிகழ்வுக்காக கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் ரவீந்திர வீஜேகுணரத்ன அவர்களும் கழந்துகொன்டார்.
குறித்த நிகழ்வு ரணவிரு சேவா ஆணையம் மூலம் 8 வது முரையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத சடங்குகள் பிறகு அதி மெதகு ஜனாதிபதி, அரச அமைச்சமார்கள், விஐபி நபர்கள், ஃபீல்டு மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு படைகளின் தளபதிகள், குடியியல் பாதுகாப்பு பணிப்பாளர் ஆகியவர்கள் உட்பட புகழ்பெற்ற விருந்தினர்களால் நினைவு தூபிக்கு அஞ்சலி வழங்கப்பட்டது.
மேலும் போர் காலத்தில் எதிரியின் தாக்குதலின் உயிர் இறந்த சிரேஷ்ட அதிகாரியாக வரலாற்றின் எலுதப்பட்டுள்ள அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ அவரின் மனைவியாலும் நினைவு தூபிக்கு அஞ்சலி வழங்கப்பட்டுள்ளன. மேலும், போரில் உயிர் இறந்த மற்றும் காணாமல் போன 110 கடற்படை வீர்ர்களின் குடும்ப உறுப்பினர்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
தாய்நாட்டின் அமைதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீர்ர்களின் பணியை பாராட்டிய அதி மெதகு ஜனாதிபதி அவர்கள் வீர்ர்களின் வாழ்க்கை உயர்தரம் செய்ய அரசாங்கம் பல திட்டங்கள் செயல்படுகிறது என்று கூறினார்.மேலும் உரையாடிய ஜனாதிபதி அவர்கள் கடலில் மற்றும் நிலத்தில் கடமைகளின் ஈடுபடும் கடற்படை வீர்ர்கள் போதை மருந்து அச்சுறுத்தலுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராட்டினார்.
இறுதியாக இலங்கையில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு பாதுகாப்புக்காக தன்னுடைய பங்களிப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றிய தெரிவித்தார்.
குறித்த நிகழ்வுக்காக மதிப்பு கூறிய மகாசங்கத்தினர் உட்பட குருக்கள்,விஐபி நபர்கள், ரணவிரு சேவா ஆணையம்,முப்படையினர் மற்றும் குடியியல் பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள், பல புகழ்பெற்ற விருந்தினர்கள் கழந்துகொன்டன.