28 வது சர்வதேச கடல் எல்லை மாநாடு சயுர கப்பலில் இடம்பெற்றது
இலங்கை- இந்தியா கடற்படை பிரதிநிதிகள் இடையே 28வதான சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த மாநாடு இன்று, (19) இடம்பெற்றது. இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு வடக்கிலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இலங்கை கடற்படை கப்பல் சயுரவில் இடம்பெற்றது.
வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா தலைமை தாங்கும் இலங்கைத் தூதுக்குழுவுக்கு இலங்கை கடலோர காவல்படையின் துணை இயக்குனர் கொமடோர் சுஜீவ பெரேரா மற்றும் கடற்படை செயல்பாடுகளுக்கான இயக்குனர் கொமடோர் கலன ஜினதாச ஆகியவர்கள் உட்பட 10 அதிகாரிகள் கழந்துகொன்டனர். அதேவேளை தமிழ்நாட்டு பகுதி பொறுப்பான கொடி அதிகாரி ரியர் அட்மிரல் ஆலோக் பாத்னகர் அவரின் தலைமையின் இந்திய கடற்படையின் 07 அதிகாரிகள் கழந்துகொன்டனர்.குறித்தனபர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பு தகுதிகள் கொண்டவர்களாகும்.
ஒத்துழைப்பு, ஒன்றிணைந்த செயற்பாடு மற்றும் கூட்டு முயற்சி என்பனவற்றின் ஊடாக படைகளை ஒருங்கிணைத்து பிராந்தியத்தில் செயல்திறன் கடல்வழி பாதுகாப்பை நிலைநாட்டுதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட குறித்த வருடாந்த மாநாடு நடத்தப்படும். மேலும், கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்பு படையினருக்கிடையில் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களைப்பரிமாறி அவற்றினூடாக இப் பிராந்தியத்தில் செயற்பாட்டு செயல்திறனை அதிகரிப்பதர்கான ஒரு தளமாக அமைகின்றுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.