சூரிய ஆற்றலின் விளைவான மின்சார வேலி நிறுவப்படும்
கடற்படை மூலம் சூரியவெவ பகுதியில் கடற்படை மூலம் நிருவப்பட்டுள்ள சூரிய ஆற்றலின் விளைவான மின்சார வேலி இன்று (09) மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களுடய கருத்தின் படி இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவருடைய வழிகாட்டுதலின் கீழ் குறித்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடற்படை மூலம் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அளிக்கும் நோக்கத்தின் புது திட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. அதின் பிரகாசமாக மனித யானை மோதல் கட்டுப்படுத்த கடற்படை பங்களிப்பு வழங்கியது. கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மிகவும் குறைந்த செலவில் குறித்த மின்சார வேலி நிறுவப்பட்டுள்ளன. இதுவரை 4.0 கிலோ மீட்டர் துரத்துக்கு நிறுவப்பட்டுள்ளன.குறித்த வேலி முலம் மனித உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது பிரதான நோக்கமாகும். எதிர்காலத்திலும் இதுபோன்ற சமூக சேவைகள் மேற்கொள்ள கடற்படையினர் தயாராக உள்ளன