பாகிஸ்தான் கடற்படையின் ‘சுல்பிகர்” கப்பல் கொழும்பு வருகை
 

பாகிஸ்தானிய கடற்படையின் ‘சுல்பிகர்” கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த இக்கப்பள்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்

அதன் பிரகு “சுல்பிகர்” கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் பய்சால் ஜாவிட் ஷெய்க் மற்றும் நேற்று வந்தடைந்த தாஷிட் கப்பலின் கட்டளை அதிகாரி கொமானடர் முனவாஸ் அப்பாஸ் சக்லேன் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். குறித்த சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும், இம்மாதம் 07ம் திகதி புறப்படவுள்ள இக்கப்பல்களின் சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கத்தில் வெலிசர கடற்படை முகாமில் கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.