மேலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்பட்டு வருகின்றன. அதன் மற்றுமொரு திட்டமாக ஊர்காவற்றுறை புனித மேரி தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம், இன்று(16) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வின் கழந்துகொன்ட யாழ். மாவட்ட பேராயர் ஜஸ்டின் பேர்ணாட் ஞானபிரகாசம் அடிகாளார் காலத்துக்கேற்ற சேவையாக கடற்படை மூலம் நாடு முழுவதும் சிறுநீரக நோயால் மக்கள் உயிர்களை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றி பாராட்டினார். நீண்ட காலமாக புனித மேரி தேவாலயத்துக்கு தேவையான இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் வழங்குதல் சம்பந்தமாக கடற்படை தளபதி உட்பட அனைத்து கடற்படை உறுபினர்களுக்கும் தன்னுடைய மனமாந்த நன்றியை தெரிவித்தார்.மேலும் புனித மேரி தேவாலயத்தில் பிரதான பேராயர் உட்பட அனைத்து பேராயர்களால் கடற்படை தளபதி உட்பட அனைத்து கடற்படை உறுபினர்களுக்கும் ஆசிர்வாதம் செய்யப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா, வடக்கு கடற்படை கட்டளையின் மூக்த மற்றும் இளைய அதிகாரிகள் உட்பட வீர்ர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கழந்துகொன்டனர்.
குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையத்துக்காக கடற்படை சமூகப் நிதியத்தியம் நிதி பங்களிப்பு வழங்கியது.கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் திறன் மற்றும் அறிவு பயன்படுத்தி இரண்டு நாட்களின் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வரை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் 191 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன 90,646 குடும்பங்களுக்கு மற்றும் 70,200ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.