ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” கொழும்பு வருகை
ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (.01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளது
இக்கப்பலின் வருகையினை முன்னிட்டு மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் மேற்கு கடற்படை பிரிவின் தளபதி ரியர் எட்மிரல் நிராஜ அட்டிகள மற்றும் தளபதி மெய்க்காவலர் பிரிவு VI, கேப்டன் மஷாஷி கொண்டோஉ, தெறுசுகி கப்பலின் கட்டளை அதிகாரி கொமன்டோர் செய்ச்சி கஷிமொடோ ஆகியோருக்கிடையே இருதரப்பு விவகாரங்கள், மற்றும் நல்லுறவுகள் தொடர்பில் சுமூக கலந்துரையாடல் இடம் பெற்றன.
இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர மற்றும் ஜப்பானிய தற்பாதுகாப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” ஆகிய கப்பல்களுக்கிடையில் இருதரப்பு கப்பல் கடற்ப்பயிட்சி கொழும்பு துறைமுகத்தில் இம்மாதம் 2ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் கடந்த ஆன்டில்(2016) அக்டோபர் 7ஆம் திகதி ஜப்பானிய தற்காப்பு இராணுவத்திக்கு சொந்தமான “கஷிமா”செடொயுகி”மற்றும் அசகிரி ஆகிய மூன்று கப்பல்களும் ஜூலை 24 ம் திகதி இனசுமா மற்றும் சுசுட்சுகி ஆகிய இரு கப்பல்கள் மற்றும் டிசம்பர் 4 திகதி கிரிசமே கப்பலும் பிரதானமாக ஒத்துழைப்பு உருவாக்க,வழங்கல் தேவைகள் மற்றும் பயிற்சிகள் ஆகிய நொக்கங்களின் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது.