சுகயீனமுற்ற வெளி நாட்டு நபருக்கு இலங்கை கடற்படையினரால் அவசர உதவி
“ஆலோநிசன்” என்ற சரக்கு கப்பலில் கட்டார் நாட்டிலிருந்து தென் கொரியா நாட்டிற்கு கடற் பிரயாணம் மேற்கொண்ட வெளிநாட்டு நபர் ஒருவரர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடும் சுகயீனமுற்றதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் அண்மையில் இன்று (30) செயற்பட்டுள்ளது..
இதன்பிரகாரம், குறித்த தகவள் கிடைத்தவுடன் கொழும்பு வெளிச்ச வீட்டிலிருந்து 31 கடல் மைல்கள் தொலை தூரம் விரைந்து சென்று சரக்கு கப்பலில் சுகயீனமுற்ற குறித்த வெளி நாட்டு நபரை கடற்படையின் விரைந்து தாக்கும் படகு பீ 421 மூலம் காப்பாற்றி உடனடியாக இலங்கை கடற்படையின் ரங்கள கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு நவலோக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.