இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுர கப்பல் லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது
 

அண்மையில் (மார்ச் 20) இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுர கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல் மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இம்மாதம் (மார்ச் 14) கொமடோர் பிரசன்ன அமரதாச உத்தரவின் கீழ் தனது பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கப்பல் 136 மணித்தியாலங்களாக 1276 கடல் மைல்கள் தனது பயணத்தினை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை லங்காவி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது..

குறித்த கப்பலில் 24 கடற்படையின் கடல்சார் அணியினர் உட்பட 215 கடற்படை வீரர்கள் சென்றுள்ளனர். மேலும் இவ்வாறு பங்குபற்றும் 40 கப்பல்களில் ஒன்றாக இரண்டாவது தடவையாகவும் குறித்த நிகழ்வில் பங்குபற்றும் எஸ்எல்என்எஸ் சயுரா கப்பல் காணப்படுகிறது.

குறித்த கண்காட்சியானது ஆசியாவின் பசுபிக் பிராந்தியத்தில் ஈராண்டுகளுக்கொருமுறை நடைபெறுகின்ற மிகப்பெரிய கடல்சார் கண்காட்சியாகும். இக்கண்காட்சி 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 14வது தடவையாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், 5 நாட்களைக் கொண்ட இக்கண்காட்சியானது இம்மாதம் 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிவரும் 25ம் திகதி நிறைவு பெறவுள்ளதோடு உலகம் பூராகவுமுள்ள நாடுகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் வனிகவியல் துறைகளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்குபற்ற உள்ளனர்.