கடற்படையினரால் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கடந்த 18ம் திகதி நிறுவியுள்ளன.
அதன் படி பலுகஸ்வெவ பகுதியில் நிருவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் குறித்த பிரதேசத்தில் 460 குடும்பங்களுக்கு மற்றும் பிசோபன்டாரகம கிராமத்தில் நிருவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 600 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது கடற்படையின் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி மையத்தினால் அதன் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி குறித்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மானிக்கப்படுகின்றது.
பிசோபன்டாரகம கிராமத்தில் நிருவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான கட்டிடம் கிழக்குக் கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவருடைய ஆலோசனையின் பேரில் குறித்த கட்டளையின் இனக்கப்பட்டுள்ள பொறியியல் துறையில் வீரர்களால் நிருவப்பட்டுள்ளது. பலுகஸ்வெவ பகுதியில் நிருவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கட்டிடம் வடமத்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவருடைய மேற்பார்வைன் கீழ் குறித்த கட்டளையின் இனக்கப்பட்டுள்ள பொறியியல் துறையில் வீரர்களால் நிருவப்பட்டுள்ளது.
இதுவரை நாடு பூராகவும் 164 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 77,985 குடும்பங்கள் மற்றும் 60,000 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.