இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீபாக்கான புதிய இயந்திரம் அவுஸ்திரேலிய அரசினால் அன்பளிப்பு
இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் ரத்னதீபா கப்பலுக்கு மாற்று இயந்திரம் ஒன்றினை அவுஸ்திரேலிய எல்லை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 40,000 அமெரிக்க டொலர் பெறுமதியான குறித்த இயந்திரத்தினை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் அதிமேதகு ப்ரைசீ ஹட்சசன் அவர்கள் கொழும்பு ரங்கள கடற்படை கப்பல் தளத்தில் நேற்று (மார்ச் .15) இடம்பெற்ற வைபவத்தின்போது கடற்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் குறித்த கப்பலின் பிரதான இயந்திரம் பழுதடைந்தது. குறித்த இயந்திரத்தை திருத்தியமைப்பதற்கு ஆகும் செலவில் புதிய இயந்திரத்தை கொள்வனவு செய்ய முடியுமாகையால் அதனை அவுஸ்திரேலிய எல்லை காவல்துறையினரிடம் கோறியது. எனினும், அவுஸ்திரேலிய எல்லை காவல்துறையினர் அதனை இலவசமாக வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இலங்கை கடற்படை பிரதம பிரதானி ரியல் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க துனை பிரதம பிரதானி ரியல் அட்மிரால் நீல் ரொசய்ரோ இயக்குனர் ஜெனரல்கள் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் இலங்கையின் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் கேப்டன் ஜேசன் சியர்ச் ஆகியவர்கள் உட்பட அவுஸ்திரேலிய எல்லை காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.