எலுவதீவு பிரதசத்தில் வடக்கு கடற்படையினரால் மருத்துவ சிகிச்சை
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் மார்ச் (5) புனித தோமஸ் கத்தோலிக்க திருச்சபையில் கள சுகாதார மருத்துவ சிகிச்சை முகாம் வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினரால் நடத்தப்பட்டது. குறித்த இம் முகாம் வடக்கு கடற் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த இம்மருத்துவ முகாம் மூலம் சுமார் 175 பேர் பயன் பெற்றனர். அத்துடன் குறித்த இத் தீவு மக்களுக்கு கடற்படையினரால் தொடர்ச்சியாக வழங்கும் சேவைகளுக்கு இத் தீவு மக்கள் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், கடுமையான மற்றும் நாள்பட்ட நோய், நாள்பட்ட/ வயதான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகள், பெண்கள் சுகாதார பராமரிப்பு போன்ற பல் வேறுபட்ட நோய்களுக்கு இலங்கை கடற்படை மருத்துவக் குழுவிரனால் ஆரம்பகட்ட சிகிச்சை வழங்கப்பட்டதுடன் விஷேட மருத்துவ உதவி தேவைப்பட்டவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த இம் மருத்துவ சிகிச்சை நடத்துவதற்கு அனலை தீவு மாவட்ட வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர். கே. மகேஸ்வரி மற்றும் எழுவை தீவு முதன்மை மருத்துவ சிகிச்சை பிரிவினர் ஆகியோரும் உதவி வழங்கினர்.நீண்டகால தொற்றா நோய்களுக்கும் ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகளும் வழங்கப்பட்டன.அத்துடன் மருந்துகள் ஊட்டச்சத்து உணவுகள் ஆகியன இலவசமாக இலங்கை திருபோஷ நிறுவனம்,அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், ஹேமாஸ் மருந்து நிறுவனம் மற்றும் சீஎல்சீ ஆகிய நிறுவங்கள் மூலம் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினால் மதகல் நுனாசி வித்தயாலயத்தில் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்று அண்மையில் (நவம்பர்.14) நடத்தப்பட்டது.

மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருடகள் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.