சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் நேற்று (7)தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஒலுவில் கடற்படையினர் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் கடற்படையினர் மற்றும் பாலமுனை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அக்கரைப்பற்று கடல் பகுதியில்சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய இரன்டு ரோந்துப் படகுகள், 20 ஒகிஸஜன் சிலிண்டர்கள், 04சுழியோடிமுகமூடிகள் 04சோடி சுழியோடி காலணிகள்,62 கடற்சிற்பிகள்,14 கடலட்டைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 18.5 கிலோ மீன்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும்பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக பாலமுனை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.