சமூக சேவை செயற்றிட்டங்களுக்காக இலங்கை கடற்படைக்கு விஷேட விருது.
ஜப்பான் இலங்கை தொழிநுட்பம் மற்றும் கலாச்சார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை கடற்படையினர் சிறு நீரக நோய் பரவளாக காணப்படும் பிரதேசங்களில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியமைக்காக விஷேட அங்கீகாரத்தினை பெற்றுள்ளனர்.
குறித்த இவ் விருது வழங்கி வைக்கும் நிகழ்வு இலங்கைகான ஜப்பான் தூதுவர் அதிமேதகு கெனிச்சி சுகுனுமு மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவு பிரதி அமைச்சர் கௌரவ. எரான் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் (மார்ச் .04) கொழும்பு கலதாரி ஹோட்டலில் 21வது தடவையாக நடைபெற்றபோது இவ் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேலும், மக்களுக்கு தூய குடிநீரினை பெற்றுக்கொடுக்கும் வகையில் இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின்கீழ் பின்தங்கிய கிராமங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் விகாரைகள் ஆகிய இடங்களில் சுமார் 73,000 குடும்பங்கள் மற்றும் 56,000 ற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் சுத்தமான குடிநீரை பெற்றுகொள்ளும் வகையில் 153 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
குறித்த இத்திட்டம் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் பணிப்புரையின் பேரில் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவினால் டிசம்பர் மாதம் 2015ம் ஆண்டு தனது சமூக சேவை பணிகளில் ஒர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டதுடன் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் ஒருங்கிணைப்புடன் நாடுபூராகவும் பல குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கான ஆரம்ப நிதிப்பங்களிப்பு இலங்கை கடற்படை வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.