மரைன் படைப்பிரிவினரின் முதலாவது வெளியேறல் அணிவகுப்பு முள்ளிக் குளத்தில்
 

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அவர்களது நேரடி கண்காணிப்பு மற்றும் நோக்களுக்கு அமைவாக இலங்கை கடற்படை வரலாற்றில் முதற்தடவையாக மரைன் படைப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது. உலகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மரைன் படைப்பிரிவுகளில் இளைய படைப்பிரிவான இதில் 6 அதிகாரிகள் மற்றும் 158 கடற்படை வீரர்கள் அடங்கலாக மொத்தம் 164 வீரர்கள் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வெளியேறினர்.

கடற்படை தளபதியின் அழைப்பின்பேரில் முல்லிகுளதில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் நடைபெற்ற குறித்த மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் பிரதம அததியாக முப்படைகளின் தளபதியும் நாட்டின் ஜனாதிபயுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், மகா சங்க நாயக்க தேரர்கள், மத பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிதிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, இராணுவ தளபதி, விமானப் படைத் தளபதி முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வெளிக்காட்டியிருந்தவர்களுக்கு கிண்ணங்கள் மற்றும்க சான்றிதழ்களைப் வழங்கினார்..

குறித்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், கடந்த காலங்களின் போது தேவையான தருணங்களில் இலங்கை கடற்படையினர் தாய்நாட்டுக்காக ஆற்றிய முதற்தர பணியை பாராட்டியதுடன் தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இலங்கை கடற்படைக்கு பெறுமதி வாய்ந்த பயிற்சிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர், சவால் மிகுந்த பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த படையினருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இப்புதிய படை பிரிவினருக்கு தொடர்ந்து தமது ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதிதாக நிறுவப்பட்டுள்ள இப்படைப்பிரிவு, கடல் மற்றும் தரை வழி படை நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபடும் முதற்தர படையாக செயல்படவுள்ளதுடன் கடல் மார்க்கமாக வரும் எந்தவொரு ஆபத்தான தருணத்தையும் வெற்றிகரமாக முறியடிக்கும் தன்மையையும் கொண்டது.

<