அமான்- 2017 கூட்டு பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற அமான்-2017 நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் கடந்த 3ம் திகதி இலங்கையிலிருந்து இலங்கை கடற்படை கப்பலான சமுதுர சென்றிருந்தது.குறித்த பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் நேற்று (23) மீண்டும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்ற பின் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் ஜகத் பிரேமரத்ன அவர்கள் மேற்கு கடற்படைக் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களை மேற்கு கடற்படைக் கட்டளை தலைமைகைத்தில் வைத்து கந்தித்து குறித்த விஜயத்தின் நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் பற்றி விபரித்தார்.இச் சுற்றுப்பயணத்தில் 186 கடற்படை வீரர்கள் மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் 8 அதிகாரிள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
10ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை நடைபெற்ற குறித்த இப் பயிற்சியல் 36 நாடுகளின் கடற்படையினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளுக்கு 21 நாடுகளில் கடற்படைகள் பங்கு பெற்றனர்.