சர்வதேச இராணுவ தினம்:முப்படை வீரர்களின் ஓட்ட நிகழ்வின் கடற்படை தளபதி கலந்து கொன்டார்.
சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு சபை (CISM) - ஓட்ட நிகழ்வு-2017 இன்று (18) காலிமுகத்திடலில் தொடங்கியது. இந் நிகழ்வை ஆரம்பிக்கும் சம்பவத்துக்கு பிரதம விருந்தினராக பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரான ஏர் சீப் மார்ஷல் கோலித குணதிலக அவர்கள் கலந்து கொண்டார்.
குறித்த இந் ஓட்ட நிகழ்வுக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்ர விஜயகுணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, முப்படைகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொன்டனர். “விளையாட்டின் ஊடாக ஆயுதப் படைகள் ஒன்றாக இனைந்து உலக சமாதானத்தை அடையும்” எனும் தொனிப்பொருளில் குறித்த இந் ஓட்ட நிகழ்வு காலிமுகத்திடலில் ஆரம்பித்து கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி அருகில் முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச இராணுவ விளையாட்டு சபை, 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும், பல்வேறு விளையாட்டு போட்டிகள் இச்சபை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 134 நாடுகள், அங்கத்துவ நாடுகளாக உள்ள இச்சபை உலகின் மிக பெரிய பல அமைப்புக்கள் கொன்ட சபையாகும்.மேலும், 1998 ஆன்டில் சர்வதேச இராணுவ விளையாட்டு சபை நோக்கம் அறிக்கையில் அனைத்து உறுப்பு நாடுகளும் கையெழுத்திவுள்ளனர்.